கூகுள் செய்த தவறுக்கு நாங்கள் என்ன செய்வோம்: ஆதார் ஆணையம்

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2018 04:43 am

helpline-number-doesn-t-mean-data-stolen-uidai

வாடிக்கையாளர்கள் மொபைல் போன்களில் தங்களின் உதவி எண் தானாகவே பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து எழுந்த சர்ச்சையை தொடர்ந்து யாரும் பயப்பட வேண்டாம், என யு.ஐ.டி.ஏ.ஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. 

சில தினங்களுக்கு முன், பிரெஞ்ச் நிபுணர் ஒருவர், வாடிக்கையாளர்கள் மொபைல் போன்களில் அவர்களது அனுமதி இல்லாமலே யு.ஐ.டி.ஏ.ஐ தங்களது அவசர எண்ணை பதிவு செய்துள்ளதாக ட்விட்டரில் எழுதினார். இதைத் தொடர்ந்து, யு.ஐ.டி.ஏ.ஐ-வின் உதவி எண் தானாகவே பதிவு செய்யப்பட்ட மொபைல் போன்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது ஆதார் எண் திருடப்பட்டு விட்டதோ என்ற அச்சத்தில் இருந்தனர்.

அவசர எண் எப்படி மொபைல் எண்களில் தானாகவே பதிவு செய்யப்பட்டன என்பது தெரியாத நிலையில், கூகுள் நிறுவனம், பல மொபைல்களில், போலீஸ், அம்புலன்ஸ் போன்ற அவசர எண்களுடன் யு.ஐ.டி.ஏ.ஐ-யின் உதவி எண்ணையும் தாங்களே பதிவு செய்ததாக தெரிவித்தது. ஏற்கனவே ஆதார் எண்கள் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் அனுமதியில்லாமல் யு.ஐ.டி.ஏ.ஐ-யின் எண் பதிவு செய்யப்பட்டது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், கூகுள் நிறுவனம் தெரியாமல் செய்த ஒரு தவறால் ஆதார் எண் திருடப்பட்டு விட்டது என்ற அர்த்தம் இல்லை என யு.ஐ.டி.ஏ.ஐ தெரிவித்துள்ளது. "கூகுள் செய்த தவறை காரணம் காட்டி, ஆதார் எண் பற்றி வதந்திகளை பரப்புவோருக்கு கடும் கண்டனம் விடுக்கிறோம்" என யு.ஐ.டி.ஏ.ஐ எச்சரித்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close