ஐ.எஸ்.ஐ தரம் இல்லாத ஹெல்மெட்டா? - அப்போ சிறைத் தண்டனை தான்

  Newstm News Desk   | Last Modified : 06 Aug, 2018 09:59 am

selling-non-isi-helmets-now-a-criminal-offence

ஐ.எஸ்.ஐ தரச்சான்று இல்லாத போலி முத்திரையுடன் ஹெல்மெட்கள் விற்பனை செய்வது கிரிமினல் குற்றமாக கருதப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இருச்சக்கர வாகனம் ஓட்டுபவர்களின் பாதுகாப்பை கருதி ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான செய்திகள் வரும் வேளையில் ஹெல்மெட் விற்பனை அமோகமாகி விடும். இதனை பயன்படுத்தி போலி ஹெல்மெட்களை சிலர் விற்பனை செய்கின்றனர். இது ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதைவிட சில சமயங்களில் உயிரை பறித்து விடுகிறது. 

இதனை தடுக்கும் விதத்தில் மத்திய அரசு புதிய உத்தரவை தெரிவித்துள்ளது. ஹெல்மெட் தரத்தை உறுதி செய்யும் வகையில், ஐ.எஸ்.ஐ தரமில்லாத ஹெல்மெட்களை விற்பனை செய்வது, கிரிமினல் குற்றமாக கருதப்படும், என விற்பனையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. மேலும் புதிய ஹெல்மெட் எப்படியிருக்க வேண்டும், என்ற விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. 

இந்த விதிமுறைகளை மீறி போலி தர முத்திரையுடன் ஹெல்மெட்களை விற்பனை செய்தால், அந்த விற்பனையாளர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படும் அல்லது ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close