தோனியை சந்தித்த பா.ஜ.க தலைவர் அமித்ஷா!

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2018 10:20 am
amit-shah-met-dhoni-and-discussed-government-s-achievements

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நேற்று பா.ஜ.க தலைவர் அமித்ஷா நேரில் சந்தித்தார். 

2019ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி பா.ஜ.க தற்போதே வெற்றி வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டது. அதன்படி 'சம்பார்க் ஃபார் சமர்தன்' என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. 

இந்த திட்டத்தின்படி பா.ஜ.க தலைமை 50 முக்கிய பிரபலங்களை சந்தித்து பா.ஜ.கவுக்கு ஆதரவு திரட்ட வேண்டும். மேலும் பா.ஜ.க நிர்வாகிகள் மக்களை நேரில் சந்தித்து கட்சியின் 4 ஆண்டுகால சாதனைகளை எடுத்துக் கூறி விளக்கமளித்து ஆதரவு கேட்ட வேண்டும். 

இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை நேற்று சந்தித்தார். டெல்லியில் உள்ள தோனியின் இல்லத்திற்கு மாலை அமித்ஷா சென்றிருந்தார். அவருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் சென்றார். அவரிடம் பா.ஜ.க அரசின் 4 ஆண்டு சாதனைகள் குறித்து அமித்ஷா விளக்கினார்.

இதே போல லதா மங்கேஷ்கர், கபில் தேவ், மாதுரி திக்சிட், ரத்தன் டாடா உள்ளிட்ட 25 பிரபலங்களையும் அமித்ஷா சந்தித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close