மாநிலங்களவை  துணைத்தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 09 Aug, 2018 11:47 am
rajya-sabha-deputy-chairman-election-date-announced-by-venkaiah-naidu

மாநிலங்களவை  துணைத்தலைவர் தேர்தல் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெற உள்ளது என அவையின் தலைவர்  வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மாநிலங்களவை  துணைத்தலைவராக இருந்த குரியன் ஜோசப்பின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனால் அந்த பதவிக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என அனைத்து கட்சிகளுமே எதிர்பார்த்திருந்த நிலையில், குடியரசுத் துணைத்தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, மாநிலங்களவை  துணைத்தலைவர் தேர்தல் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெற உள்ளது எனவும் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

இதையும் படிக்கலாமே: அ.தி.மு.க., தலைவராகிறார் ரஜினி..? குழப்பத்தில் அமைச்சர்கள்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close