சத்தீஸ்கர்: போலீஸ் என்கவுண்டரில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

  முத்துமாரி   | Last Modified : 06 Aug, 2018 02:07 pm
14-maoists-killed-in-encounter-with-security-forces-in-chhattisgarh

சத்தீஸ்கரில் நடந்த பாதுகாப்புப்படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த துப்பாக்கிச்சண்டையில், 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகும். தொடர்ந்து இப்பகுதியில் மாவோயிஸ்டுகள் உள்நுழைவதும், போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டுவதுமாக தொடர்ந்து வருகிறது.  இந்த நிலையில், சுக்மா மாவட்டம் கொல்லப்பள்ளி மற்றும் கொன்டா பகுதிகளுக்கு இடையே மாவோயிஸ்டுகள் ஊடுருவுவதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப்படையினர் அங்கு சென்றனர். தொடர்ந்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்களை எதிர்த்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் பதிலுக்கு இந்திய வீரர்கள் மீது தாக்குதலை நடத்தினர், இறுதியில் இந்த தாக்குதலில் 14 மாவோயிஸ்டுகள் இந்திய பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

மேலும், சம்பவ இடத்தில் இருந்து 16 துப்பாக்கிகளும், வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து மாவோயிஸ்டுகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிஆர்பிஎப் படையினர், சிறப்பு அதிரடி படையினர், மாவட்ட போலீஸ் படை என அனைவரும் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close