பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க நாடாளுமன்றக்குழு கூட்டம் தொடங்கியது!

  முத்துமாரி   | Last Modified : 07 Aug, 2018 11:11 am

bjp-parliamentary-meeting-starts-at-delhi

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக்குழு கூட்டம்  சற்றுமுன் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் அமித்ஷா, அனந்த்குமார், அர்ஜூன்ராம் மெஹ்வால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் பா.ஜ.க  எம்.பிக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். 

மாநிலங்களவை துணைத் தலைவர்தேர்தல் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெறும் என அவையின் தலைவர் வெங்கையா நாயுடு நேற்று தெரிவித்தார். இதையடுத்து பா.ஜ.க சார்பில் துணைத்தலைவர் தேர்தலில் யாரை நிறுத்துவது என்பது தொடர்பாகவும் 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: காவேரி மருத்துவமனைக்கு படையெடுக்கும் கருணாநிதி குடும்பத்தினர்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close