உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.எம்.ஜோசப், இந்திராபானர்ஜி

  முத்துமாரி   | Last Modified : 07 Aug, 2018 12:02 pm

indira-banerjee-vineet-saran-km-joseph-sworn-in-as-supreme-court-judges

நீதிபதிகள் கே.எம்.ஜோசப், இந்திராபானர்ஜி, வினீத் சரண் ஆகிய மூவரும் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.

உத்தரகாண்ட் மாநில தலைமை நீதிபதியாக இருந்த கே.எம்.ஜோசப் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்குபரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்துடன் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினீத் சரண் ஆகியோருக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கே.எம்.ஜோசப், இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகிய மூவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில் இந்திராபானர்ஜி, அவரைத் தொடர்ந்து வினித் சரண், கே.எம்.ஜோசப் ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close