மும்பை கடற்கரையில் ஜெல்லி மீன்கள் தாக்கி 150 பேர் காயம் 

  Newstm Desk   | Last Modified : 08 Aug, 2018 04:31 am

over-150-injured-in-blue-bottle-jellyfish-attacks-at-mumbai-beaches

மும்பை கடற்கரையில் திடீரென படையெடுத்த ஜெல்லி மீன்கள் தாக்கி, சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 150 பேர் காயமடைந்தனர். ஜெல்லி மீன்கள்தாக்கினால் கடுமையான தோல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. 

ஜெல்லி மீன்கள் எனப்படுவது ஆழ்கடலில் வாழ்பவை. தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டும் கடற்கரைக்கு வரும். இந்தியாவில் அரபிக் கடலோர ஜெல்லி மீன்கள் மும்பை கடற்கரை பகுதிக்கு படை எடுக்கும்.  இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஜெல்லி மீன்களின் வரத்து மும்பை கடற்கரையில் படையெடுத்து வருகின்றன.  இந்த ஜெல்லி வகையான மீன்கள் தாக்கினால் மனிதர்களுக்கு கடுமையான சொறி, ஒவ்வாமை, தோல் அரிப்பு போன்றவை ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்த ஜெல்லி மீன்கள் மும்பை ஜுகு கடற்கரைக்கு பொதுபோக்குவதற்காக வந்தவர்கள், சுற்றுலா பயணிகள் என 150க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளது. இவர்களை கடித்துருப்பது நீளக் குடுவை ஜெல்லி மீன்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதே போல, மும்பையின் மற்ற கடற்கரைகளிலும் ஜெல்லி மீன்கள் வருகின்றன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு அவற்றின் வருகை உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் மும்பை கடற்கரையில் உள்ள சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூறும்போது''கடந்த இரண்டு நாட்களாகவே கடற்கரை முழுவதும் ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன. ஜெல்லி மீன்கள் பற்றி தெரியாத பலர் இதன் தாக்குதலில் சிக்கிக் கொண்டனர். பலருக்கு உடல் அரிப்பு, ஒவ்வாமை ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் இதுபற்றி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்'' எனக் கூறினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close