கருணாநிதி மறைவு: உறுப்பினரல்லாத ஒருவருக்காக நாடாளுமன்றம் முதன்முறையாக ஒத்திவைப்பு!

  Padmapriya   | Last Modified : 08 Aug, 2018 01:07 pm

karunanidhi-passes-away-parliament-houses-adjourn-for-the-day-after-paying-respect

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவரது உடல் கோபாலபுரம் மற்றும் சிஐடி காலனி கொண்டு செல்லப்பட்டு  பின்னர் இன்று காலை 4 மானிக்கு ராஜாஜி ஹால் வந்தடைந்தது.

பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.  

கருணாநிதியின் மறைவை அடுத்து, இன்று நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த காலை 10.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் சரியாக 11.10 மணிக்கு ராஜாஜி ஹால் வந்து கருணாநிதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

இதனிடையே, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனும், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் கருணாநிதி இறப்புக்கு இரங்கல் குறிப்பை வாசித்தனர். பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. 

மறைந்த திமுக தலைவர் 5 முறை தமிழக முதல்வராக இருந்துள்ளார். நாடாளுமன்ற  உறுப்பினராக இருந்தது இல்லை. இரு அவைகளிலுமே உறுப்பினர் அல்லாத ஒருவரின் மறைவுக்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை செயல்பாடுகள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை. அத்தகைய பெருமை கருணாநிதிக்கு முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close