மும்பை எண்ணெய் நிறுவனத்தில் பெரும் தீ விபத்து!

  Newstm Desk   | Last Modified : 08 Aug, 2018 08:35 pm

heavy-fire-breaks-in-mumbai-petroleum-plant

மும்பையில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவன உற்பத்தி தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 22 பேர் காயமடைந்தனர். 

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள மஹுல் என்ற இடத்தில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவன தொழிற்சாலையில் இன்று திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அந்நிறுவனத்தில் உள்ள ஹைட்ரோகார்பன் உற்பத்தி வளாகத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு தீ பற்றியது. அதில் 72 டன்கள் ஹைட்ரோகார்பன் இருந்ததாக தெரிகிறது. இந்த விபத்தை தொடர்ந்து, மற்ற பகுதிகளுக்கும் தீ பரவ துவங்கியது.

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் அவசர உதவிக்குழு, தீயணைப்பு படையினர் என பல குழுக்களாக அங்கு விரைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். மீதி ஹைட்ரோகார்பன் எரியும்வரை, தீயை கட்டுப்பாட்டில் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில், தொழிலாளர்கள் 41 பேர் காயமடைந்தனர். அதில் 22 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. "கடும் வெப்பத்தால், சற்று தொலைவில் இருந்தே தீயணைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close