மத்திய அரசுக்கு ரூ.50,000 கோடி வழங்கும் ரிசர்வ் வங்கி!

  Newstm Desk   | Last Modified : 08 Aug, 2018 09:42 pm

reserve-bank-transfers-rs-50-000-crores-to-center

இந்த ஆண்டு கணக்கீட்டின் முடிவில், ரூ.50,000 கோடி லாபத்தை மத்திய அரசுக்கு வழங்குவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஜூன் மாத இறுதியில் ரிசர்வ் வங்கியின் ஆண்டு கணக்கு முடிவுக்கு வரும். இந்த ஆண்டு, ஜூன் மாதம் வரை ரூ.50,000 கோடி ரூபாய் லாபமாக கிடைத்ததை தொடர்ந்து, அதை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்குகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ரூ.30,659 கோடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சேவைகள் மற்றும் பரிமாற்றங்களால் கிடைக்கும் வட்டி, கமிஷன் மூலம் ரிசர்வ் வங்கி வருவாய் ஈட்டி வருகிறது. தங்களது செயல்பாடுகள், திட்டமிடல், உள்ளிட்ட தேவையான செலவினங்களை தவிர மீதி இருக்கும் லாபத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கி சட்டமாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close