பிச்சையெடுப்பது கிரிமினல் குற்றமா? உயர் நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 08 Aug, 2018 10:41 pm

begging-is-not-a-crime-delhi-high-court

பிச்சையெடுப்பது கிரிமினல் குற்றமல்ல என தெரிவித்த டெல்லி உயர் நீதிமன்றம், பிச்சையெடுப்பவர்கள் மீது அபராதம் விதிக்க தடை விதித்துள்ளது. 

தலைநகர் டெல்லியில் பிச்சையெடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போடப்பட்டிருந்த சட்டங்களை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கீதா மிட்டல் மற்றும் சி.ஹரி, பிச்சி எடுப்பதற்கு எதிரான சட்டங்களை தடை செய்தனர். பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 'மும்பை பிச்சை தடை சட்டம்' அரசியல் சாசனத்திற்கு எதிரானது என நீதிபதிகள் குறிப்பிட்டனர். 

பிச்சை எடுப்பவர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை, மனித உரிமை அடிப்படையில் தடுக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரியிருந்தனர். இதற்கு எதிரான சட்டங்கள் தடை செய்யப்பட்டாலும், டெல்லியில் அதிக அளவில் வற்புறுத்தி பிச்சை எடுக்க வைப்பவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்க டெல்லி அரசை நீதிமன்றம் வலியுறுத்தியது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close