மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல்: பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் அமோக வெற்றி!

  முத்துமாரி   | Last Modified : 09 Aug, 2018 12:52 pm
bjp-wins-inparliament-rajyasabha-election

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயணன் வெற்றி பெற்றுள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை  துணைத்தலைவராக இருந்த குரியன் ஜோசப்பின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக குடியரசுத் துணைத்தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெற உள்ளது எனவும் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார். 

அவர் குறிப்பிட்டபடி, மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் நாராயணன் 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளருக்கு இதில் 105 வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close