இனி லைசன்ஸ், ஆர்சி புக் ஒரிஜினல் காண்பிக்கத் தேவையில்லை!

  முத்துமாரி   | Last Modified : 10 Aug, 2018 03:37 pm

no-need-to-carry-driving-license-rc-as-centre-directs-states-to-accept-documents-through-digilocker

வாகன ஓட்டிகள் லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட ஆவணங்களை போனில் டிஜிட்டல் முறையில் காண்பித்தால் போதுமானது என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாம் வாகனங்களில் சேரும்போது ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொள்வது வழக்கம். தேவையான ஆவணங்களை அவர்களிடம் காண்பிக்கவேண்டும். ஆவணங்கள் நம்மிடம் இல்லாத பட்சத்தில் அதற்காக அபராதத்தொகை செலுத்த நேரிடும். நம்முடைய  மொபைல் போனில் வைத்திருக்கும் டிஜிட்டல் ஆவணங்களை காண்பித்தால் போலீசார்  அதனை ஏற்றுக்கொள்வதில்லை. 

இதையடுத்து, மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, லைசன்ஸ், ஆர்சி புக். இன்சூரன்ஸ் ஆகியவற்றின் ஒரிஜினலை இனி காண்பிக்க தேவையில்லை. உங்களுடைய போனில் அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட மொபைல் செயலியில் சேவ் செய்துகொள்ளுங்கள். போக்குவரத்து போலீசார் கேட்கும்போது இதனை காண்பித்தால் போதுமானது. அவ்வாறு காண்பிக்கும்போது போக்குவரத்து போலீசார் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close