மும்பை ரயிலில் கீக்கி சேலஞ்ச செய்த இளைஞர்கள் கைது

  கனிமொழி   | Last Modified : 10 Aug, 2018 07:55 pm

3-youngsters-arrested-for-performing-kiki-challenge

கடந்த சில வாரங்களாகவே  கீக்கி சேலஞ்ச் எனும் விநோதமான சேலஞ்ச் பிரபலமாகி வருகிறது. ஓடும் வாகனத்தில் இருந்து குதித்து "கீக்கி டு யு லவ் மீ" என்று தொடங்கும்  பாடல் ஒன்றுக்கு நடனமாடும் ஆபத்தான இந்த சேலஞ்சை பலரும் முயற்சி செய்து வருகின்றனர். இந்த சேலஞ்சை வயலில் உழுதுகொண்டிருந்த இரண்டு தமிழ் சகோதரர்கள் கிண்டலடித்த வீடியோவும் சமீபத்தில் வைரலானது. இதை தொடர்ந்து இதுபோன்று உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் காரியத்தை செய்தால் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என அனைத்து மாநில காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் மும்பை புறநகர் ரயில் நிலையத்தில் கீக்கி சேலஞ்ச்சை செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மும்பையில் யூ-டியூப் சேனலை நடத்தி வரும் இந்த மூன்று இளைஞர்களும் அவர்களது சேனலுக்கு சிறப்பான வீடியோக்களை உருவாக்கி அவற்றை நிறைய பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.அந்த யோசனையில்  ஓடும் ரயிலில் இவர்கள் செய்த கீகீ சேலஞ்ச் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது.

இந்த வீடியோவை பார்த்த  மும்பை போலீசார், ஓடும் ரயிலில் விதிகளை மீறி பயணம் செய்ததற்காகவும், ஆபத்தான இந்த கீக்கி சேலஞ்சை முயற்சி செய்ததற்கும் கண்டித்து  இவர்களை கைது செய்து மும்பை புறநகர் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஓடும் ரயிலில் கீக்கி சேலஞ்ச் செய்த இந்த இளைஞர்கள் அந்த ரயில் நிலையத்தை சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது நீதிமன்றம்.

 

Advertisement:
[X] Close