நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுற்றது... முத்தலாக் மசோதா தாக்கல் இல்லை!

  முத்துமாரி   | Last Modified : 10 Aug, 2018 04:51 pm

parliament-session-over-triple-talaq-bill-deferred-to-next-session

நாடாளுமன்ற மக்களவை மறுதேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் மீதான  விவாதங்கள் நடைபெற்றன. முக்கிய மசோதாவாக கருதப்படும் முத்தலாக் திருத்தப்பட்ட மசோதா கண்டிப்பாக  இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. முன்னதாக நாடாளுமன்ற மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் இன்று ஒத்துழைப்பு கொடுக்காததாலும், கட்சிகளிடையே பல்வேறு முரண்பட்ட கருத்துக்களினாலும் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. எனவே மசோதா அடுத்த கூட்டத்தொடருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close