மீண்டும் விசாரணைக்கு வரும் ஆருஷி கொலைவழக்கு

  Newstm Desk   | Last Modified : 10 Aug, 2018 08:14 pm
arushi-talwaar-s-murder-case-is-back-to-court

சிறுமி ஆருஷி தல்வார் கொலைவழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறுமியின் பெற்றோரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்தது.இதனை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இதனை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று கொண்டது.அதோடு தல்வார் தம்பதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி நொய்டாவின் மருத்துவத் தம்பதிகள் தான் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார். இவர்  வீட்டில் 2008ம் வருடம்  மே 13-ல் இவர்களது ஒரே மகளான ஆருஷி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது வீட்டில் வேலை செய்யும் ஹேமராஜ் என்னும் நேபாளிதான் கொலையாளி என்று காவல் துறையினர் அறிவித்தனர். மறுநாள் தல்வார் வீட்டின் மாடியில் அவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததால் இந்த வழக்கு காவல்துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்தது.

சம்பவம் நடந்த இரவில் தனது மனைவி நுபுர் தல்வாருடன் ராஜேஷ் வீட்டில் இருந்ததால் காவல்துறையினருக்கு சந்தேகம் அவர்களின் மேல் திரும்பிய நிலையில் மே 23, 2008-ல் ராஜேஷ் தல்வார்தான் அவரது மகள் ஆருஷியைக் கொன்றார் என கைது செய்து செய்யப்பட்டார். பின்னர் 50 நாட்களுக்கு பின் ஜாமீன் பெற்றார்.ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் ஜூன் 1, 2008-ல் இந்த வழக்கு சிபிஐக்கு  மாற்றப்பட்டது.

இதனைத்  தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில் காஸியாபாத் சிறப்பு சிபிஐ நீதிமன்றம், தல்வார் தம்பதிக்கு நவம்பர் 25, 2013-ல் ஆயுள் தண்டனை வழங்க தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தல்வார் தம்பதியினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இதற்கு எதிராக மேல் முறையீடு செய்ய சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் கோரியது. அதற்க்கு தற்போது உச்ச நீதிமன்றமும்  சம்மதம் தெரிவித்துள்ளது.


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close