கேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 11 Aug, 2018 04:30 pm

kerala-floods-death-toll-rises-to-32

கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

ஆபத்தான இடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சுமார் 54,000 பேர் 439 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் 3 நாட்களுக்கு கடும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வயநாடு மாவட்டத்திற்கு  வரும் 14ம் தேதி வரையும், இடுக்கி மாவட்டத்திற்கு 13ம் தேதி வரையிலும் சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close