முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் ஒரே விமானத்தில்...வெள்ளப்பாதிப்புகள் குறித்து ஆய்வு!

  முத்துமாரி   | Last Modified : 11 Aug, 2018 02:02 pm
kerala-cm-other-leaders-survey-the-flooded-areas

கேரளாவில் வரலாறு காணாத மழையினால் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வெள்ளபாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். 

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் கனமழையால் 5 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.  மேலும் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், கேரளாவில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 53,500 பேர் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ராணுவம், கடற்படை, மீட்புப்படையினர், விரைவுப்படையினர் என ஆயிரக்கணக்கானோர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து வெள்ளப்பாதிப்பு  பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் இன்று ஆய்வு செய்தார். இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள சேத நிலையை ஆய்வு செய்தார்.  உடன் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோரும் முதல்வருடன் சென்று பார்வையிட்டனர்.

ஒரே விமானத்தில் முதல்வரும், எதிர்கட்சித்தலைவரும் சென்றது, அதேபோன்று இருவரும் சேர்ந்து மக்களை சந்தித்தது மக்கள் மத்தியில்  பாராட்டை பெற்றுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close