கேரளாவிற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி: புதுச்சேரி அரசு அதிரடி!

  முத்துமாரி   | Last Modified : 11 Aug, 2018 02:42 pm

puducherry-govt-helps-to-kerala-for-flood

கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படுகிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் கனமழையால் 25 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கையும் 29 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று வெள்ளபாதிப்பு பகுதிகளை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் எதிர்கட்சித்தலைவருடன் இணைந்து நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அண்டை மாநிலங்கள் உதவிகரம் நீட்டி வருகின்றன. அந்த வரிசையில்,  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படுகிறது . மேலும் கேரளாவிற்கு, புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து உதவிகளையும் செய்ய தயார். புதுச்சேரி மக்களும் தங்களால் இயன்ற உதவிகளை கேரளாவிற்கு செய்யலாம். அரிசி,பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள், உடைகள், மருந்துகளை அளிக்கலாம். அவை மொத்தமாக கேரளாவிற்கு அனுப்பிவைக்கப்படும்" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close