கேரளாவில் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!

  முத்துமாரி   | Last Modified : 11 Aug, 2018 02:30 pm

cm-pinarayi-vijayan-announced-flood-relief-fund-to-people-who-are-died-in-disaster

கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவியை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவில் வரலாறு காணாத மழையினால் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 53,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இடுக்கி அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அதன் 5 மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் மேலும் பாதிப்புகள் அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ராணுவம், கடற்படை, மீட்புப்படையினர், விரைவுப்படையினர் என ஆயிரக்கணக்கானோர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே இன்று வெள்ளப்பாதிப்பு பகுதிகளை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து பார்வையிட்டார்.   தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு மழையால் கேரளா பேரழிவை சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டமைப்பது ஒரு கடினமான பணியாக இருக்கும். நிவாரண பணிகளுக்கு அனைவரும் பங்களிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், கேரள மக்களுக்கான நிவாரண உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவியும், வெள்ளத்தால் வீடுகள், விளை நிலங்களை இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியும் அளிக்கப்பட உள்ளது. முதல்வர் பினராயி விஜயன் கேரள நிவாரண நிதிக்காக தனது பணத்தில் ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். அதுபோன்று மக்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்யவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close