ஒரு மாத சம்பளத்தை நிதியாக கொடுத்துள்ளேன் : கேரள ஆளுநர்

  Newstm Desk   | Last Modified : 11 Aug, 2018 05:03 pm

kerala-governer-gives-his-one-month-salary-as-fund

கேரளாவில் பெய்து வரும் கன  மழை காரணாமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றும் வருகிறது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஒரு மாத ஊதியத்தை நிதியாக  வழங்கியுள்ளதாக கேரள ஆளுநர் சதாசிவம் கூறியுள்ளார்.

 அவர் கூறுகையில்  , "கேரள வெள்ள பாதிப்புகள் குறித்த செய்திகளை புதிய தலைமுறையில் பார்த்து வருகிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் நாளை ஆய்வு செய்கிறார்.மேலும் கேரளாவில் ஆகஸ்ட் 15இல் நடைபெறவுள்ள சுதந்திர தின விழா நிகழ்சிகளை ரத்து செய்துள்ளோம். எனது ஒரு மாத ஊதியம் 1 லட்சத்தை வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளேன்" என தெரிவித்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close