கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதி கொடுத்த சூர்யா- கார்த்தி

  Newstm Desk   | Last Modified : 11 Aug, 2018 05:57 pm
actor-surya-karthi-gives-rs-25-lakh-fund

கேரளாவில் கடந்த ஒரு வாரமாகவே பலத்த மழை காரணமாக கொச்சி பாலக்காடு மலப்புரம் திருவனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ள காடாக மாறியுள்ளது. வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. ஆபத்தான இடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சுமார் 54,000 பேர் 439 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரள முதல்வரின் வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 25 லட்சம் நிதி வழங்கியுள்ளனர் நடிகர் சூர்யாவும் அவர் தம்பி கார்த்தியும். கேரளாவில் நடிகர் சூர்யா, கார்த்தி படங்கள் ரிலீஸ் செய்யபடுவதினால்  அவர்களுக்கு தனி ரசிகர் மன்றம் அமைந்திருப்பது குறிப்பிடதக்க்கது.

மேலும் கேரளாவிற்கு தேவையான உதவிகளை மதிய அரசு செய்து வருகிறது. அண்டை மாநிலத்தவர்களும் உதவ முன்வந்திருப்பது கேரள மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close