கேரளாவில் தொடரும் கனமழை எச்சரிக்கை!

  திஷா   | Last Modified : 12 Aug, 2018 09:39 am

high-alert-for-heavy-rain-in-kerala

கடந்த சில நாட்களாக கொட்டி தீர்க்கும் கனமழையால் கேரளாவில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் பெரும்பாலான மாவட்டங்கள் நீரில் தத்தளிக்கின்றன. 

உயிர் பலி, நிலச்சரிவு என மிகவும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஏறக்குறைய 31,000 பேர் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். தொடர் மழையால் பல ஏக்கர் விளை நிலங்கள் சேதமடைந்துள்ளது. 

இதனால் கேரளாவிற்கு உதவ மத்திய அரசோடு மற்ற மாநில அரசுகளும் முன் வந்துள்ளன. தவிர சினிமா பிரபலங்களும் உதவிக்கரம் நீட்ட தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில் ஆகஸ்ட் 15 வரை இடுக்கி, வயநாடு, கண்ணூர், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close