முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடம்

  Newstm News Desk   | Last Modified : 12 Aug, 2018 09:30 am

former-pm-serious-but-stable-amit-shah-rajnath-singh-call-visits-aiims

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் முதுமை காரணமாக அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார். வீட்டிலேயே தொடர் சிகிச்சை பெற்றுவந்த அவரின் உடல்நிலை மோசமானதால், கடந்த மாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அவரது உடல்நிலையில் தற்போது பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் வாஜ்பாயை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்தியாவின் பத்தாவது பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய் 1998 - 2004ம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார். மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின், காங்கிரஸ் கட்சியை சேராத ஒருவர் பிரதமராக ஐந்தாண்டு ஆட்சியை நிறைவு செய்தவர் என்ற பெருமைக்குரியவர் அடல் பிகாரி வாஜ்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
[X] Close