ரயில் பயணிகளுக்கான இலவச காப்பீடு ரத்தாகிறது!

  Newstm Desk   | Last Modified : 12 Aug, 2018 11:43 am
travel-insurance-for-train-passengers-ends-from-september-1

செப்டம்பர் மாதம் முதல் ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச காப்பீடு ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்திய ரயில்வே துறை சார்பில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் ரயில் பயணிகளுக்காக இலவச காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. ரயிலில் பயணிக்கும் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம், படுகாயம் அடைந்து ஊனமுற்றவர்களுக்கு ரூ. 7.5 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் என காப்பீடு வழங்கப்பட்டு வந்தது .

இந்நிலையில், இந்த திட்டத்தை வரும் செப்டம்பர் 1 முதல் ரத்து செய்ய உள்ளதாக கூறப்படுகறிது. பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, காப்பீடு வேண்டும் அல்லது வேண்டாம் என்ற வாய்ப்புகள் கொடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close