நாற்று நட்ட கர்நாடக முதல்வர்: குவியும் பாராட்டுகளும் கிண்டல்களும்!

  Newstm News Desk   | Last Modified : 13 Aug, 2018 04:59 am

mandya-district-karnataka-cm-plants-saplings

மாண்டியா பகுதியில் கர்நாடக முதல்வர் குமாராசாமி விவசாயிகளுடன் இணைந்து நாற்று நட்டதற்கு பாராட்டுகளும் கிண்டல்களும் குவிந்து வருகிறது. 

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம் பாண்டவபுரம் பகுதியில் விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நடும் பணியில் ஈடுபட்டார் கர்நாடக முதல்வர். 100 பெண்கள் மற்றும் 50 ஆண்கள் முதலமைச்சருடன் சேர்ந்து, நெல் நடவு செய்தனர்.

பிறகு விவசாயிகளிடம் பேசிய முதல்வர் குமாரசாமி, "விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, இந்த நாற்று நடவும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வயலில் இறங்கும்போது விவசாயிகளின் சிரமத்தை அறிந்தேன்" என்றும் தெரிவித்தார். 

மேலும், 25 ஆண்டுகளுக்கு பிறகு விவசாய நிலத்தில் கால் வைப்பதாகவும், இந்த நாளை தன் வாழ்நாளில் மறக்க இயலாது என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 

குமாரசாமியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது வெறும் விளம்பரத்திற்காக செய்யப்பட்டது தான் என்று பா.ஜ.கவினர் கிண்டல் செய்தும் வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close