அப்பாவிடம் இருந்து ரூ.45 லட்சம் திருடி நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்த சிறுவன்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 13 Aug, 2018 05:03 am

madhya-pradesh-boy-doles-out-rs-46-lakh-from-dad-to-his-friends

மத்திய பிரதேசத்தில் தனது சொந்த வீட்டில் இருந்து ரூ.45 லட்சம் பணத்தை திருடி நண்பர்களுக்கு பகிர்ச்ந்து கொடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் ஜபல்பூரில் வசித்துவரும் தொழிலதிபர் மகன் 10 வது படித்து வருகிறான். சிறுவனின் தந்தை வீட்டு அலமாரியை வைத்த பணத்தை பார்த்துக்கொண்டே இருந்த சிறுவன் ரூ. 45 லட்சம் பணத்தை திருடிவிட்டான். வீட்டிலிருந்த பணத்தை காணவில்லை என தொழிலதிபர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலதிபரின் 10ம் வகுப்பு படிக்கும் மகன்தான் பணத்தை திருடியது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து தொழிலதிபரின் மகன் கூறுகையில், வீட்டில் அப்பா வைத்திருந்த ரூ.45 லட்சத்தை நான் எடுத்தேன். இந்தப் பணத்தை என்னுடைய வகுப்பில் உள்ள 35 நண்பர்களுக்கும் பிரித்துக் கொடுத்து நண்பர்கள் தினத்தை கொண்டாடினேன்” என கூறினான்

இதையடுத்து போலீசார் வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களிடமும் விசாரித்துள்ளனர். இதுவரை மாணவர்களிடமிருந்து ரூ.15 லட்சத்தை மட்டுமே திரும்ப பெற்றுள்ளனர். 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close