ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை உருவாக்குவோம்- பிரதமர் மோடி

  ஐஸ்வர்யா   | Last Modified : 12 Aug, 2018 09:13 pm
we-re-crafting-new-future-together

ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை உருவாக்குவோம் என இந்திய பூர்வீகம் கொண்ட இலங்கை மக்களிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

இலங்கையில் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி,  “இந்தியாவின் பங்களிப்பில் புதிதாக கட்டப்பட்ட வீடுகளில் தமிழர்கள் வசிக்க உள்ளனர். இலங்கையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மேலும் 10000 வீடுகள் கட்டித்தரப்படும். ஏற்கனவே திட்டமிட்டப்படி 60000 வீடுகளில் 47000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இலங்கை இந்தியாவுக்கு சிறப்பு வாய்ந்தது; தொடர்ந்து சிறந்ததாகவே இருக்கும்” என தெரிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close