ஆதார் எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த யு.ஐ.டி.ஏ.ஐ முடிவு!

  Newstm Desk   | Last Modified : 13 Aug, 2018 04:58 am
uidai-to-make-citizens-more-aware-about-aadhaar-usage

ஆதார் எண்ணின் பாதுகாப்பு குறித்து சமீபத்தில் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து , பொதுமக்களிடையே, ஆதார் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தனி நபர் அடையாள ஆணையம் யு.ஐ.டி.ஏ.ஐ தெரிவித்துள்ளது. 

ஆதார் எண்ணை பல்வேறு அரசு சேவைகளுடன் இணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வந்தன. பலமுறை ஆதார் எண் மூலம் பொதுமக்களின் விவரங்களை திரட்ட ஹேக்கர்கள் முயற்சி செய்து வந்தனர். ஒருசில முறை அது வெற்றிகரமாக ஹேக் செய்யப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. ஆனால், தங்கள் பக்கம் இருந்து ஆதார் விவரங்களை யாராலும் திருட முடியாது என யு.ஐ.டி.ஏ.ஐ தொடர்ந்து தெரிவித்து வருகிறது. 

இதுகுறித்து வெளிநாட்டு நிபுணர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) தலைவர் ஆர்.எஸ் ஷர்மா, ட்வீட்டர் பக்கத்தில் தனது ஆதார் எண்ணை வெளியிட்டார். ஆதார் விவரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக நிரூபிக்கவே இவ்வாறு செய்ததாக அவர் கூறினார். இதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை எழுந்தது. தனது பதிவை ஷர்மா நீக்கினார். ஆதார் விவரங்களை பொதுமக்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடக் கூடாது என யு.ஐ.டி.ஏ.ஐ எச்சரித்தது. 

இந்த சம்பவத்தின் விளைவாக, வங்கி எண், பான் கார்டு எண் போலவே, ஆதார் எண்ணையும் பொது இடங்களில் வெளியிடக் கூடாது என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படடுத்த யு.ஐ.டி.ஏ.ஐ நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. "ஆதார் குறித்து பொதுமக்களிடையே இருக்கும் குழப்பங்களை போக்க சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதன் விளைவாக பொதுமக்கள் பயமில்லாமல் சுதந்திரமாக ஆதாரை பயன்படுத்துவார்கள்" என  யு.ஐ.டி.ஏ.ஐ தலைவர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close