தனியார் மயமாக்கப்படுகிறதா இஸ்ரோ? - சிவன் பேட்டி

  Newstm Desk   | Last Modified : 13 Aug, 2018 04:58 am

is-isro-being-privatized

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் இஸ்ரோவை தனியார் மயமாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அஹ்மதாபாத்தில் உள்ள விண்வெளி விண்ணப்ப மைய தலைவர் தபன் மிஸ்ராவை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார் சிவன். இதைத் தொடர்ந்து இஸ்ரோவை தனியார் மயமாக்க சிவன் முயற்சி செய்து வருவதாக மிஸ்ரா குற்றம் சாட்டினார். இதுகுறித்து கேட்டபோது , "இஸ்ரோவை எப்படி தனியார் மயமாக்க முடியும். தற்போது போலவே, வெவ்வேறு திட்டங்களுக்காக வெவ்வேறு தொழில்நுட்ப தேவைகளுக்காக தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறோம். இப்படித் தான் இஸ்ரோ இத்தனை நாளாக இயங்கி வருகிறது. தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து கூட்டணி வைத்து இயங்குவதை தான் நம் முன்னோர்களும் விரும்பினார்கள்" என கூறினார். 

சந்திரயான்-2 செயற்கைகோளை இந்த ஆண்டின் இறுதிக்குள் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் கூறினார். ஏற்கனவே போடப்பட்ட திட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளதற்கு, சந்திரயான்-2ன் தனித்துவம் தான் காரணம் என அவர் கூறினார். இஸ்ரோவின் மிகவும் கடினமான திட்டம் இதுதான் என்பதால் பல கட்ட ஆய்வுகள் நடத்தி அதை வெற்றிகரமாக அனுப்ப முயற்சித்து வருவதாக கூறினார். நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் பற்றி கேட்டதற்கு, "அதை நோக்கி பயணம் செய்துகொண்டிருக்கிறோம். ஆனால்,  தற்போது அதற்கான எந்த திட்டங்களும் இல்லை. தற்போதைக்கு விண்ணில் 45 செயற்கைகோள்கள் இந்தியாவுக்கு உள்ளன. மேலும் 45 செயற்கைகோள்களை அனுப்பநடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்" என்றார் சிவன்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close