வங்கியின் சர்வரை ஹேக் செய்து ரூ.94 கோடி திருட்டு! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

  Newstm Desk   | Last Modified : 14 Aug, 2018 11:19 am
cosmos-bank-s-server-hacked-by-hongkong-based-company-and-making-a-transaction-of-rs-94-42-crore

மகாராஷ்டிராவில் தனியார் வங்கி ஒன்றின் சர்வரை ஹேக் செய்து ரூ.94 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காஸ்மோஸ் வங்கியின் ஒரு கிளை நிறுவனத்தில் வங்கியின் சர்வர் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலமாக சுமார் ரூ.94.42 கோடி பணம் திருடப்பட்டுள்ளது. போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக ஹாங்காங்கில் இருந்து அடையாளம் தெரியாத ஒரு மர்ம நபரால் இந்த மோசடி நடந்துள்ளது என தெரிய வந்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close