காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல்....டெல்லியில் உச்சகட்டப் பாதுகாப்பு!

  Newstm Desk   | Last Modified : 14 Aug, 2018 02:49 pm
terrorist-attack-suspected-in-delhi-man-wearing-iaf-uniform-spotted-at-connaught-place

காஷ்மீர் வழியாக டெல்லியில் தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக வந்த தகவலையடுத்து தலைநகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்தியாவின் 72வது சுதந்திர தினம் நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி இந்தியா முழுவதுமே பல்வேறு முக்கிய நகரங்களில் அதிகபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் எல்லை வழியாக தலைநகர் டெல்லிக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுவுருவியுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் டெல்லியில் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காலிஸ்தான் தீவிரவாதிகள் 2 பேர் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிடப்போவதாகவும் உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் தீவிரவாதிகள்  உள்ளே நுழையாத அளவுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close