உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட தேசிய கீதம் 'ஜன கன மன'- யூடியூப் 

  Padmapriya   | Last Modified : 15 Aug, 2018 02:55 pm

piano-rendition-of-jana-gana-mana-has-set-a-youtube-record

உலக நாடுகளின் தேசிய கீதம் அனைத்தையும் விட இந்தியாவின் தேசிய கீதமான 'ஜன கன மன'-வின் வீடியோ ஒன்று அதிகம் பேரால் பார்க்கப்பட்டதாக யூடியூப் குறிப்பிட்டுள்ளது.  

பியானோ கருவியின் இசை மூலம் அமைக்கப்பட்ட 'ஜன கன மன' பாடலை குறிப்பிட்டு யூடியூப் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் 72வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி யூடியூப் வலைதளத்தில் 'ஜன கன மன' என்ற பியானோ இசை பதிவேற்றப்பட்டது. அந்த இசைப் பாடல் ஒரே நாளில் சுமார் 50 லட்சம் பேரால்  பார்க்கப்பட்டது. 

மும்பையைச் சேர்ந்த விஜய் அரோரா என்ற பியானோ இசைக் கலைஞர் பாடலை இசைத்து வெளியிட்டிருந்தார். சுதந்திர தினமான இன்று தற்போதைய நொடி வரை இந்தப் பாடலை சுமார் 7.5  கோடிக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். 

இந்த வகையில் யூடியூப் வலைதளத்தில் அதிக அளவில் பார்க்கப்பட்ட தேசிய கீதம் என்ற மிகப் பெரிய சிறப்பை இந்த வீடியோ பெற்றுள்ளது.  முன்னதாக பிரான்ஸ் நாட்டு தேசிய கீதத்தின் விடியோ பதிவு ஒன்று 3.60 கோடி பேர் பார்த்திருந்ததாக யூதியூப் அறிவித்திருந்தது. இதையடுத்து தற்போது அந்த சாதனையை 'ஜன கன மன' பாடலின் பியானோ வெர்ஷன் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


   
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close