கேரள வெள்ளம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்

  Newstm News Desk   | Last Modified : 16 Aug, 2018 10:05 am

praying-for-the-safety-of-keral-pm-modi

கேரள முதல்வரை தொடர்பு கொண்டு வெள்ளம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி. 

கேரள மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி விட்டன. மேலும் அங்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நிலவரம் குறித்து விசாரித்தார். 

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதில், "இன்று காலை  கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசினேன். வெள்ள நிலவரம் குறித்து நாங்கள்  பேசினோம். மாநிலம் முழுவதும் மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யும் படி பாதுகாப்பு துறை அமைச்சரிடம் கூறினேன். கேரள மக்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close