டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சோனியா, ராகுல் வருகை!

  முத்துமாரி   | Last Modified : 16 Aug, 2018 04:38 pm
sonia-gandhi-rahul-gandhi-visits-aiims-hospital-delhi

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளனர். 

முன்னாள் பிரதமரும், பா.ஜ.கவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமாக உள்ளது என நேற்று மருத்துவமனை தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது.  இதையடுத்து இன்று காலை 11 மணி அளவில் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள இரண்டாவது அறிக்கையில், "வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. உயிர்காக்கும் கருவிகள் மூலமாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாநில முதல்வர்களும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனை வந்து வாஜ்பாயின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றனர்.

தொடர்ந்து பிரதமர் மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரும் இன்று எய்ம்ஸ் மருத்துவமனை வந்தனர். 

இன்று காலை ஒருமுறை ராகுல்காந்தி மருத்துவமனை வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளார். தலைவர்கள் வருகையையடுத்து, டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close