வாஜ்பாய் மறைவு தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு- பிரதமர் மோடி 

  ஐஸ்வர்யா   | Last Modified : 16 Aug, 2018 06:19 pm
pm-narendra-modi-mourning-to-vajpayee-death

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று மாலை 5.5 மணிக்கு காலாமானார். அவருக்கு வயது 93. உடல்நலக்குறைவு காரணமாக வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று முதல் மோசமாகி வந்ததாக மருத்துமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்று இன்று மாலை அவர் உயிரிழந்தார். 

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “வாஜ்பாய் மறைவு நாட்டுக்கும், தனக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. வாஜ்பாய் அளித்த உத்வேகம், வழிகாட்டல் ஒவ்வொரு இந்தியருக்கும், பாஜகவினருக்கும் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.  
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close