சிறந்த மகனை நாடு இழந்துவிட்டது- ராகுல்காந்தி

  ஐஸ்வர்யா   | Last Modified : 16 Aug, 2018 06:36 pm

rahulgandhi-mourning-to-vajbhai-death

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று மாலை 5.5 மணிக்கு காலாமானார். அவருக்கு வயது 93.உடல்நலக்குறைவு காரணமாக வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று முதல் மோசமாகி வந்ததாக மருத்துமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்று இன்று மாலை அவர் உயிரிழந்தார். 

ராகுல்காந்தி தனது ட்விட்டர் பதிவில், “சிறந்த மகனை நாடு இழந்து விட்டது; மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கோடிக்கணக்கான மக்களால் விரும்பப்பட்டவர் மற்றும் மதிக்கப்பட்டவர்” என குறிப்பிட்டுள்ளார். 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close