இந்தியா அழுகிறது! வாஜ்பாய் மறைவுக்கு வைரமுத்து, விவேக் இரங்கல்

  ஐஸ்வர்யா   | Last Modified : 16 Aug, 2018 06:48 pm
vairamuthu-vivek-mourning-to-vajbhai-death

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு வைரமுத்து, நடிகர் விவேக் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று மாலை 5.5 மணிக்கு காலாமானார். அவருக்கு வயது 93. உடல்நலக்குறைவு காரணமாக வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று முதல் மோசமாகி வந்ததாக மருத்துமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்று இன்று மாலை அவர் உயிரிழந்தார். 

வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில், “இந்தியப் பெருந்தலைவர் வாஜ்பாயின் மரணம் என்பது ஒன்றல்ல. ஒரு தலைவருக்கும் ஒரு கவிஞருக்குமென்று இரண்டு மரணங்கள் நேர்ந்திருக்கின்றன. இந்தியா எழுந்து நின்று அழுகிறது. ஒரு கண்ணால் ஒரு தலைவனுக்காக; மறு கண்ணால் ஒரு கவிஞனுக்காக. வாஜ்பாயிக்கு என் கண்ணீர் வணக்கம் ” என குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில்,  " இந்தியாவில் 4 வழிச்சாலை அமைய காரணமாய் இருந்தவர்” என பதிவிட்டுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close