வாஜ்பாய் தேசத்திற்காக பல சேவை செய்தவர்- சச்சின் இரங்கல்

  ஐஸ்வர்யா   | Last Modified : 16 Aug, 2018 06:55 pm

sachin-mourning-to-vajbhai-death

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலம் சச்சின் டெண்டுல்கர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று மாலை 5.5 மணிக்கு காலாமானார். அவருக்கு வயது 93. உடல்நலக்குறைவு காரணமாக வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று முதல் மோசமாகி வந்ததாக மருத்துமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்று இன்று மாலை அவர் உயிரிழந்தார். 

சச்சின் தந்து ட்விட்டர் பகக்த்தில் “இந்தியாவிற்கு பெரிய இழப்பு இன்று. அடல் பிகாரி வாஜ்பாய்ஜி மறைந்துவிட்டார். அவர் நமது தேசத்திற்கு  பல சேவைகள் செய்துள்ளார். அவரது குடும்பத்தாருக்காக பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close