வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு

  முத்துமாரி   | Last Modified : 16 Aug, 2018 07:13 pm
vajpayee-s-funeral-ceremony-will-be-tomorrow

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் பிரதமரும், பா.ஜ.கவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று மாலை 5.05 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அவரது மறைவையொட்டி, பிரதமர்மோடி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை 6.30 மணிக்கு நாடாளுமன்ற சிறப்பு அவை கூடி வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று முதல் 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. 

தொடர்ந்து அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. டெல்லி விஜய்கோட்டில் அவரது உடல் நாளை மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close