மரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே... கவிஞராக மின்னிய வாஜ்பாய்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 16 Aug, 2018 11:49 pm

best-of-atal-bihari-vajpayee-poem

முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த அரசியல் தலைவருமான வாஜ்பாய் பத்திரிக்கையாளராக வாழ்வைதொடங்கி, கவிஞர், பேச்சளர் என பன்முகம் கொண்டவர். ஒரு பிரதமர் கவிஞராக இருந்தார் என்பதை விட ஒரு சிறந்த கவிஞர் பிரதமராக இருந்தார் என்பதே சரி.   இவரின் சிறந்த 5 கவிதைகள்!... 

“மரணமே! திருட்டுத்தனமாக பதுங்கிக்கொண்டு வராதே. என்னை எதிர்கொண்டு நேரடியாக பரிட்சித்துப் பார்.”

“நான் மௌனமாகவும் இல்லை உரத்த குரலில் பாடலும் இல்லை! மனதுக்குள் ராகம் ஒன்றை முணுமுணுக்கிறேன்”

“நானிலம் இனி ஒருபொழுதும் குருதியின் துளிகளைத் தாங்காது விளை நிலங்கள் ஏதும் இனி மரணத்தை அறுவடை செய்யாது இனி ஒருபொழுதும் வானம் தீ மழை பொழியாது- இனி போர் நிகழ விடமாட்டோம்”

“வெற்றி என்ன? தோல்வி என்ன? சிறிதும் அச்சம் எனக்கு இல்லை. கடமையின் வழியில் கடுகிச் செல்கையில் இதுவோ அதுவோ எதுவும் சரிதான்... வரங்கள் எதுவும் நான் கேட்பதில்லை! ஒரு போதும் தோல்வியை ஏற்பதில்லை. புதுப் பாதை வகுக்கத் தயக்கமில்லை... உச்சியில் எழுதிய எழுத்தினை மாற்றவே, தோல்வியை வீழ்த்தி நிமிர்ந்து நின்றிட புதுக் கவிதை பாடி மகிழ்கின்றேன்!!

“சூரியன் மீண்டும் எழுவான் வெய்யிலோ மீண்டும் தோன்றும் ஆனால் என் தோட்டத்துப் பச்சைப் பசும்புல்லில் பனித்துளிகள், எல்லாப்பருவங்களிலும் காண இயலாது”
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close