பா.ஜ.க தலைமையகம் எடுத்து செல்லப்படுகிறது வாஜ்பாய் உடல்

  Newstm Desk   | Last Modified : 17 Aug, 2018 10:16 am
vajpayee-s-mortal-brought-to-bjp-headquarters

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் டெல்லயில் உள்ள பா.ஜ.க தலைமை  அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நேற்று காலமானார். நேற்று இரவு முதல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வாஜ்பாயின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். 

இந்நிலையில், தற்போது அவரது உடல் டெல்லியில் உள்ள  பண்டித் தீனதயாள் உபத்யாய் மார்க்கில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. முப்படை வீரர்கள் மரியாதையுடன் மலர்களால் அலங்கிரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அவரது உடலை கொண்டு சென்றனர்.  அங்கு பிற்பகல் 1 மணி வரை அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பா.ஜ.க அலுவலகத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்கள் வந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close