கேரள வெள்ளப்பாதிப்பு பகுதிகளை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!

  முத்துமாரி   | Last Modified : 17 Aug, 2018 11:50 am

pm-modi-to-visit-flood-hit-kerala

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கேரளாவுக்குச் சென்று வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிட இருக்கிறார். 

கேரளா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் அங்குள்ள அணைகள், ஏரிகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. மழையால் ஏற்பட்ட வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 90க்கும் அதிகமாகியுள்ளது. மேலும், லட்சக்கணக்கில் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத இந்த மழையால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அதே நேரத்தில், பல்வேறு இடங்களில் இருந்தும் கேரள மக்களுக்கு நிவாரண உதவிகள் வந்த வண்ணம் இருக்கின்றன. 

தற்போது கேரளாவில் பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோட் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் 'ரெட் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பிரதமர் மோடி கேரளாவிற்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். கேரளாவில் வெள்ளப்பாதிப்புகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவருடன் ஆலோசித்தேன். இன்று மாலை கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

 

 

இன்று மாலை முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு முடிந்ததும், பிரதமர் மோடி கேரளா செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close