வாஜ்பாயின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 4 கி.மீ தூரத்துக்கு நடந்தே செல்லும் பிரதமர் மோடி!

  முத்துமாரி   | Last Modified : 17 Aug, 2018 04:00 pm
vajpayee-s-final-journey-pm-modi-amit-shah-walk-along-with-carriage

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா சுமார் 4 கி.மீ தூரத்திற்கு ராணுவ வாகனத்துடன் இணைந்து நடந்தே செல்கின்றனர். 

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும்,  முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று(ஆகஸ்ட் 16) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். நேற்று மருத்துவமனையில் இருந்து வாஜ்பாயின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் இன்று காலை 11.30 மணியளவில் பா.ஜ.க தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

தொடர்ந்து, மதியம் 2 மணியளவில் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஸ்மிருதி ஸ்தல் என்ற இடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ராணுவ மரியாதையுடன் நடைபெறும் இந்த இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நடந்தே செல்கின்றனர். பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இருந்து உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள இடமான ஸ்மிருதி ஸ்தல் 3.6 கி.மீ தொலைவுடையது குறிப்பிடத்தக்கது. மேலும்,  இறுதி ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள் தவிர லட்சக் கணக்கான பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close