அமெரிக்காவுக்கு இந்திய குழந்தைகள் கடத்தல்: முக்கிய குற்றவாளி குஜராத்தில் கைது

  Newstm Desk   | Last Modified : 18 Aug, 2018 05:42 am

kingpin-of-racket-trafficking-children-to-united-states-arrested-in-gujarat

இந்தியாவிலிருந்து சுமார் 300 குழந்தைகளை கடத்தி அமெரிக்காவில் விற்ற கடத்தல்காரனை மும்பை போலீசார் குஜராத்தில் கைது செய்துள்ளனர். 

குஜராத்தைச் சேர்ந்த 11 மற்றும் 16 வயதுடைய 2 சிறுமிகள், கடந்த மார்ச் மாதம் மும்பை புறநகர் வெர்சோவா பகுதியில் உள்ள ஒரு சலூன் அருகிலிருந்து போலீஸாரால் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக ஆமிர் கான், தாஜுதீன் கான், அப்சல் ஷேக், ரிஸ்வான் சோட்டானி என 4 பேரை கைது செய்தனர். 

பின்னர் அவர்களீடம் தொடர்ந்த விசாரணையில் சிறுமிகளை அமெரிக்காவுக்கு கடத்திச் செல்ல மேக்கப் போட சலூனுக்கு அழைத்து வந்ததும், இதன் பின்னணியில் ராஜேஷ் காம்லிவாலா என்ற பெரிய மூளை இருப்பதும் தெரியவந்தது.

இவரை மும்பை போலீஸ் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அந்த நபரை குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் கடந்த 11-ம் தேதி மும்பை போலீஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காம்லிவாலா நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். விபச்சாரத்திற்காக சிறார்களை விலைக்கு வாங்குதல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

கடந்த 2007 முதல் இந்தக் கும்பல் சுமார் 300 குழந்தைகளை அமெரிக்காவுக்கு கடத்தியுள்ளதாகவும் ஒவ்வொரு குழந்தையையும் தலா ரூ.45 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் இது தொடர்பாக மும்பை காவல்துறை துணை ஆணையர் பரம்ஜித் சிங் தாகியா செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த எண்ணிக்கை எவ்வாறு எதன் அடிப்படையில் கூறப்படுகிறது என தெரியவில்லை.  தற்போது இந்த வழக்கில் 2 குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு என்ன விலை பேசினர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் இது தொடர்பான விவகாரங்கள் வெளியாகும்" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close