மகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 17 Aug, 2018 08:01 pm

journalist-cancels-daughter-s-engagement-donates-the-funds-to-kerala

கேரளாவில் பத்திரிகையாளர் மனோஜ் என்பவர் கன்னூரில் தனது மகளுக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு அந்தப் பணத்தை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தொடர் கனமழையால் கேரளாவே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. வெள்ளத்தாலும், மண்சரிவாலும் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். 100 ஆண்டுகளுக்கு இல்லாத மழை கேரளாவில் தற்போது பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் தவித்துவரும் மக்களை மீட்க கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்புப்படையினர், அதிவிரைவுப் படையினர் போராடிவருகின்றனர். இதுவரை கேரள மழை மற்றும் நிலச்சரிவுக்கு 324 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் கேரள மக்களுக்கு, தமிழகத்தில் உள்ள பிரபலங்கள், திரையுலகினர் தங்களால் முடிந்த பணம் மற்றும் பொருட்களை நிவாரணமாக அளித்துவருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் கன்னூர் என்ற பகுதியில் தனது மகளுக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்ததை ரத்து செய்துவிட்டு அந்த பணத்தை கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவுள்ளதாக பத்திரிக்கையாளர் மனோஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனோஜ், “ எனது மகள் தேவி மற்றும் வழக்கறிஞர் சுதாகரன் என்பவருக்கு ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கேரளாவே மழை புரட்டிப்போட்டுள்ளது. இத்தகைய துக்கமான சமயத்தில் மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த மனம் வரவில்லை எனவே மணமகன் வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தத்திற்காக வைத்திருந்த தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குகிறேன்” என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து நல் உள்ளத்துடன் உதவிய மனோஜ்க்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close