உயரும் பலி எண்ணிக்கை...கேரளாவில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்!

  முத்துமாரி   | Last Modified : 18 Aug, 2018 09:15 am

house-collapses-in-kerala-3-people-dead

கேரளாவில் பத்தினம்திட்டா என்ற பகுதியில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு உணவு, உடை, இதர பொருட்கள், நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. மீட்புப்பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் சுமார் 10 முறைக்கு மேல் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 14 மாவட்டங்களுக்கும் நேற்று ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கேரளாவில் பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளதாக  அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இன்று பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பத்தினம்திட்டா என்ற பகுதியில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்றே கூறப்படுகிறது. 

நேற்று பிரதமர் மோடியும் கேரளா வந்து வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். இன்று முதல் மழை குறைய வாய்ப்பிருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதே நேரத்தில் மேலும் இரு நாட்களுக்கு அதாவது வருகிற திங்கட்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close