வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு!

  Newstm Desk   | Last Modified : 18 Aug, 2018 10:40 am
actor-jayaram-and-his-family-rescued-from-landslide

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கித்தவித்த பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினரை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். 

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத மழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சம் மக்கள் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை, இதர பொருட்கள், நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. மீட்புப்பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள நடிகர் பிருத்விராஜ் வீட்டுக்குள் புகுந்த வெள்ளத்தில் அவரது தாயார் மல்லிகா சுகுமாரன் சிக்கிக்கொண்டார். பின்னர் மீட்புப்படையினர் உதவியோடு அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். இதையடுத்து நடிகர் ஜெயராம் தனது மனைவி பார்வதி, மகள் மாளவிகாவுடன் காரில் சென்று கொண்டு இருந்தார். திருச்சூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை 'குதிரன்' என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது, திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஜெயராமின் கார் உள்பட  பல வாகனங்கள் அதில் சிக்கிக்கொண்டன. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, பின்னர் மீட்புடையினரின் உதவியோடு அனைவரும் பத்திரமாக  மீட்கப்பட்டனர். போலீஸ் நிலையத்தில் அவர்கள் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close