Breaking: கேரளாவுக்கு மேலும் 5 கோடி நிதியுதவி! முதல்வர் பழனிசாமி அதிரடி!

  முத்துமாரி   | Last Modified : 18 Aug, 2018 02:16 pm
tn-gives-rs-5-crore-relief-fund-to-kerala

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மேலும் 5 கோடி நிதியுதவி வழங்கி முதல்வர் பழனிசாமி அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத மழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அவர்களுக்கு உணவு, உடை, இதர பொருட்கள், நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. மீட்புப்பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கேரளாவுக்கு 5 கோடி நிதியுதவி அளித்திருந்தார். இதையடுத்து மேலும் 5 கோடி நிதியுதவி அளிப்பதாக சற்றுமுன் அறிவித்துள்ளார். முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து இது வழங்கப்படுகிறது. மேலும், "அத்துடன் 500 மெட்ரிக் டன் அரிசி, உயர் வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட 300 மெட்ரிக் டன் பால், வேஷ்டிகள், கைலிகள், 10,000 போர்வைகள், அத்தியாவசிய மருந்துகள் தேவையான மருத்துவக்குழுக்களுடன் அனுப்பப்படும். இதற்கான பணிகளை ஒருங்கிணைக்க வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தலைமையில், இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சந்தோஷ் பாபு மற்றும் தரேஸ் அகமது ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close